"கையது கமலமாகும் கருமங்கள் பலவும் செய்யும் 
தையலான் பினியனாகும் தந்தை தாய்க்கினியனாகும்
மெய்யழகுடையனாகும் விரும்பிய கல்வி கற்கும் 
பொய்யுரை என்ரும் சொல்லான் பூராட நாளினானே.''

-மரண கண்டிகை 

Advertisment


பொருள்: பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர், எந்த கடினமான வேலையையும் செய்யக்கூடியவர். ஆனால், பெண்களால், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.    

Advertisment

காற்றால், நெருப்பின் உருவம் மாறும். இடத்தால் மண்ணின் மணமும் மாறும், குளிர்ச்சி, உஷ்ணத்தால் காற்றின் திசையும் மாறும். ஓடை நீரும், அருவி நீரும் மண்ணின் சுவையால் மாறும். ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். ஒரே கிரகத்தின் நட்சத்திரங்கள் மூன்று வெவ்வேறு ராசிகளில் வந்தாலும், அவை ஒரே குணத்தைக் காட்டுவதில்லை. நட்சத்திரத்தின் குணத்தையும், ராசியின் தன்மையையும் ஆராய்ந்து பார்த்தே பலனறிய வேண்டும்.

20. பூராடம்

பொதுவான குணம்: பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய கருணையான பார்வையாலும், இனிமையான பேச்சாலும் அனைவரையும் தன்வசப் படுத்தி வைத்திருப்பார்கள். கடினமான விஷயத்தையும், எளிதாக கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எந்த ஒரு காரியத் திலும் அவசரத்தில் முடிவெடுத்துவிட்டு அப்புறம் அதிலிருந்து மீள்வார்கள். தடைகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

Advertisment

star1

 பூராட  நட்சத்திரம் (ஆண்)      

குணம்: பூராட நட்சத் திரத்தில் பிறந்தவர், புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் அறிவுத்திறன் மிக்கவர், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார். விவாதங்களில் வல்லவராக இருப்பார்.

குடும்பம்: குடும்பத்தை மிகவும் நேசிப்பவராக இருப்பார். ஆனாலும் மன குழப்பத்தால், குடும்பத்தில் அமைதி குறையும். 

கல்வி: சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். ஆனாலும், வாலிப வயதில், பல்வேறு கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

தொழில்: கணக்கு, வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, அலங்காரப் பொருட்கள், தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் பணியாற்றும் யோகம் பெற்றவர்கள்.

திருமணப் பொருத்தம்: அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகினி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம், சுவாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம். 

திருமண வாழ்க்கை: சிலருக்கு மறுமண அமைப்பு இருக்கும். பிள்ளை களின்மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள்.

ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால், சந்திர தசையில், மூச்சு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பூராட  நட்சத்திரம் (பெண்)

குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், புத்திசாலிகள், தன்னம்பிக்கை கொண்டவர்கள், கனிவான பேச்சும், கவர்ச்சியான பார்வையால் அனைவரையும் கவரக்கூடியவர்கள். ஆனால் சில  நேரங்களில் பொறுமை யின்றி அவசர முடிவுகளை எடுப்பார்கள். எதையும் எதிர்க்க  தயங்காதவர்கள். தடைகளை கண்டு அஞ்சாமல், சரியான நேரத்துக்காகக் காத்திருந்து காரியத்தைச் சாதிப்பார்கள்.

குடும்பம்: பிள்ளைகளின்மீது அதிக பாசம் இருக்கும். 

அவர்களுக்காக வாழ்க்கைத் துணையையே ஒதுக்கி விடுவார்கள்.

திருமணப் பொருத்தம்: பரணி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, கார்த்திகை- 2, 3, 4 பாதம், நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களை, திருமணம் செய்துகொள்ளலாம்.

ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் சந்திர தசையில், தைராய்ட், சிறுநீரகக் கல் ஆகியவை உண்டாகும்.

(பூராட  நட்சத்திர பலன்கள் தொடரும்)
செல்: 63819 58636